கால்நடை பாதுகாப்பு வாரியம் சார்பில் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு கால்நடை மருத்துவ வளாகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் திமிரி ஊராட்சி ஒன்றியம். கனியனூர் ஊராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கும் நோக்கிலும் கால்நடை பாதுகாப்பு வாரியம் சார்பில் ரூ.12 இலட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு கால்நடை மருத்துவ வளாகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்

 தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.1.2026) இராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம். கனியனூர் ஊராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கும் நோக்கிலும் கால்நடை பாதுகாப்பு வாரியம்  சார்பில் ரூ.12 இலட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு கால்நடை மருத்துவ வளாகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.  

இம்மையம் தமிழகத்திலேயே  முதலாவதாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலமாக தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முறை செயல்படுத்தப்படும். மேலும் இம்மையத்தில் அறுவை சிகிச்சை அறைகள் பாதுகாப்பான கூண்டுகள் மற்றும் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் பணியாற்ற உள்ளனர். இதன்மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, விலங்குகளின் நலனும் பாதுகாக்கப்படும் மற்றும் பொதுமக்களிடையே விலங்கு நல விழிப்புணர்வு, செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தற்போது கனியனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கால்நடை கிளை நிலையம் இந்த வளாகத்தில் தொடர்ந்து செயல்படும்.

இம்மையத்தில் அடுத்த 2 வாரத்திற்குள்  அறுசை சிகிச்சை  உபகரணங்கள் மற்றும் இதர உபகரணங்கள் நிறுவப்பட்டு செயல்பட தொடங்கப்படும்.   மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சிகளிலுள்ள தெரு நாய்கள் கொண்டுவரப்பட்டு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 5 நாட்கள் மையத்தில் கண்காணிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட பகுதிகளிலேயே விடப்படும்.  நாள்தோறும் 5 முதல் 10 நாய்களுக்கு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்படும். 

 இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர், மரு.ஜோ.பிரசன்னா, ஒன்றியக் குழு தலைவர்.அசோக், துணைத் தலைவர்.ரமேஷ்,  மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.தன்ராஜ்,  கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.க.வெங்கடேஸ்வரன். உதவி இயக்குநர். மரு.க.திருநாவுக்கரசு கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.எஸ்.சதீஷ்பாபு. மரு.க.சக்திநாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் .ரேகா, மாவட்ட விலங்கு நல அலுவலர். மரு.எஸ்.வினோத்குமார். கால்நடை ஆய்வாளர்.வி.சுமதி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்