வானாபாடி கிராமத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 129 ஆவது பிறந்த நாள் விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தில்,இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 129 ஆவது பிறந்த நாள் விழா, வானாபாடி நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் தீவிர பக்தரான நேதாஜி கே.நடசேன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகி கே.ஆர் கல்யாணராமன் மகன் கே.கே. ராஜாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின்  உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இனிப்புகள்.எழுதுபொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் வானாபாடி கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் திரளாக  கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்