காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாள் விழா – சிறப்பு நிகழ்ச்சி!!

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வரும், புரட்சித் தலைவர் எனப் போற்றப்படும் எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூர் கழகச் செயலாளர். மஞ்சுநாதன் தலைமை தாங்கினார்.கழகப்பொருளாளர். ரங்கநாதர், KS ஆறுமுகம், பழனி, அண்ணாமலை, கோதண்டன், மணிமேகலை மற்றும் மகளிர் அணி மணிமேகலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர். சு. ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, காவேரிப்பாக்கம் நகராட்சிக்கு அலுவலகம் அருகில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு, எம்ஜிஆரின் மக்கள் சேவையும் சாதனைகளும் நினைவுகூரப்பட்டன. இந்நிகழ்ச்சி உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது.

ஆர்காடு செய்தியாளர் ஆனந்த். 

கருத்துகள்