வடமதுரையில் மனமகிழ் மன்றத்தை சூறையாடி பணம் பறித்த சிறுவன் உட்பட 10 பேர் கைது - 3 கார்கள், டூவீலர் பறிமுதல்!!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, BSNL- அலுவலகம் பின்புறம் வெங்கடேஷ் (எ) சக்கரபாணி(51) என்பவருக்கு சொந்தமான மனமகிழ் மன்றத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடி ரூ.62,000 பணத்தை பறித்து சென்றது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இதுகுறித்து வேடசந்தூர் DSP. பவித்ரா மேற்பார்வையில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார், சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக வடமதுரை, ரெட்டியபட்டியை சேர்ந்த அழகர்சாமி(29), தாடிக்கொம்பு சேர்ந்த சஞ்சய்குமார்(19), மணிகண்டபூபதி(19), அகரமுத்து(20), திண்டுக்கல்லை சேர்ந்த பரமசிவம்(22), கிருத்திக்ரோஷன்(27), ஜெயசூர்யா(24) மோர்பட்டியை சேர்ந்த விஜய்(19), 16 வயது சிறுவன் உட்பட 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கார்கள், 1 டூ வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்