விஜய் கூட்டத்திற்கு நிபந்தனைகள்!!


விஜய்யின் பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும் நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-லும் குடிநீர்வசதி செய்து தரப்படவேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை தாங்கள் மனுவில் குறிப்பிட்டதை விட மிகாமல் இருக்க வேண்டும். அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனி வழி விடப்படவேண்டும். 18ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறையின் நிபந்தனைகள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்