குறிஞ்சிப்பாடியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஊராட்சி மீனாட்சிபேட்டையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உழவர் நலசேவை மையம் திறந்து வைக்கபட்டது.

வேளாண்துறையில் படித்த வேலையில்லா பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் சுயதொழில் செய்பவர்கள் பயன்பெறும் வகையிலும், தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தினை அறிவித்திருந்தார்.

அதன் பேரில் இன்று முதல்வர் அவர்கள் திருவண்ணாமலையில் வேளாண்துறை கண்காட்சியில் முதலமைச்சர் இன் உழவர் நல சேவை மையத்தை துவக்கி  வைத்தார்.இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடியில் முதலமைச்சரின் உழவர் நலசேவை மையத்தினை மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் பொறியாளர் சிவக்குமார் தலைமையேற்று வேளாண் துறை அதிகாரிகள் முன்னிலையில் உழவர் நலசேவை மையத்தினை ரிப்பன் வெட்டி  குத்து விளக்கேற்றி  முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த உழவர் நலசேவை மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு விவசாய இடு பொருட்கள் மானிய விலையிலும், 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால் இந்த பகுதி விவசாயிகள் பயன்பெருவார்கள் என அதிகாரிகள் விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர்.மலர்வண்ணன்,வேளாண்மைதுணைஇயக்குநர்அமிர்தராஜ்,வேளாண்மை அலுவலர். செல்வமூர்த்தி, உழவர் நல சேவை மைய ஆலோசகர் கார்த்திகேயன் மற்றும் வடலூர் நகரமன்ற தலைவர் சீவக்குமார், வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும்விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர். மலர் வண்ணன்,உழவர் நல சேவை மைய ஆலோசகர் கார்த்திகேயன், மத்திய திட்ட வேளாண் துணை இயக்குனர். அமிர்தராஜ், வேளாண் அலுவலர். செல்வமூர்த்தி 

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணைத் தலைவர். ராமர். வடலூர் நகர மன்ற தலைவர். சிவக்குமார் நகர செயலாளர். தன. தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்