திருச்சியில் நடைபெற்ற ஆண்கள் கால்பந்து போட்டி!!

பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சிராப்பள்ளி அனைத்து மண்டலங்களுக்கிடையேயான ஆண்கள் கால்பந்து போட்டியானது மாட்சிமை தாங்கிய கல்லூரியில் 10.12.2025 முதல் 12.12.1025 வரை நடைபெற்றது. இதில் தஞ்சை மண்டலத்தில் இருந்து காதர் முகைதீன் கல்லூரி அதிராம்பட்டினம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி தஞ்சாவூர், மாட்சிமை தஞ்சை மன்னர் கல்லூரி புதுக்கோட்டையும் திருச்சி மண்டலத்தில் இருந்து  ஜோசப் கல்லூரி,  ஜமால் முஹம்மது கல்லூரி,  பிஷப் கீப்பர் கல்லூரி திருச்சி ஆகிய கல்லூரிகள் கலந்து கொண்டனர். போட்டியானது லீக் முறையில் நடைபெற்றது. இதில்  முதல் பரிசை சென் ஜோசப் கல்லூரி திருச்சி  இரண்டாம் இடத்தை ஜமால் முகமது கல்லூரி திருச்சி மற்றும் மூன்றாம் இடத்தை பிஷப் கீப்பர் கல்லூரி திருச்சி பெற்றனர். 

வெற்றி பெற்றவர்களுக்கு  கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, தமிழ் துறை தலைவர் சேதுராமன் பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டு  செயலாளர் மெகபூப் ஜான்  ஆண்கள் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் கருப்பையா ஆகியோர் பரிசுகளை வணங்கினார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜான் பார்த்திபன் உடற்கல்வி பயிற்றுநர் ராம்குமார் உடற்கல்வி த்துறை தலைவர் நாகேஸ்வரன், ஜான் போஸ்கோ மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்