வாலாஜாவில் இந்திய குடியரசு கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் இந்திய குடியரசு கட்சி (பீம்ராவ் அம்பேத்கர்) சார்பில் ஆலோசனை கூட்டம் வாலாஜா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் அனந்தலை தங்கராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர். கோபிநாதன், மாநிலத் துணைத் தலைவர் சம்பத்குமார் , மாநில பொருளாளர். பாலசுந்தரம், மாநில இளைஞர் அணி அனந்தலை ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அம்பேத்கர் பேரன் தேசிய தலைவர் பீம் ராவ் அம்பேத்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்வில் செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 69 ஆவது நீயாவது அரசியல் சட்ட பாதுகாப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் பேரனும் இந்திய குடியரசு கட்சி இந்திய பௌத்த சங்கம் சார்பில் ஆகிய அமைப்புகள் தலைவர் தேசிய தலைவர் ஆன பீம் ராவ் யசோதாவ் ராவ் அம்பேத்கர் தமிழ்நாட்டில் இந்திய குடிசை கட்சியை வலிமையான அரசியல் சக்தியாக உருவாக்குவது நோக்கம் என்று தெரிவித்தார்.
இந்திய குடியரசுக் கட்சியின் (பீம்ராவ் அம்பேத்கர்) கோரிக்கைகள்:
1. வன்கொடுமைகளுக்கான சிறப்பு விதிகள்: சாதி அடிப்படையிலான வெறுப்புக் குற்றங்கள் மற்றும் "கௌரவக் கொலைகளை" தடுக்கவும், அவற்றைக் கையாளவும் ஒரு தனி மாநிலச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே முதன்மைக் கோரிக்கையாகும். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அக்டோபர் 2025-ல், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை இந்தச் சட்டத்தை வரைவு செய்ய முதலமைச்சர் அறிவித்தார். 1. சாதி அடிப்படையிலான வெறுப்புக் குற்றங்கள் மற்றும் கௌரவக் கொலைகளைத் தடுக்க, ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை நாங்கள் கோருகிறோம்.
2. பட்டியல் சாதி/பழங்குடியினர் துணைத் திட்டச் சட்டத்தை அமல்படுத்துதல்: பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகைக்கு நேரடி விகிதத்தில் பட்ஜெட் நிதியைச் செலவிட வேண்டும் என்று கட்டளையிடும் 2024 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்டச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தக் குழுக்கள் கோரியுள்ளன. இதில் பட்டியல் சாதி/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதி வசதிகள் மற்றும் தரமான கல்வி வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். 3. கட்டாய கொள்முதல் முன்னுரிமை: பல கொள்முதல் முகமைகளுக்கு இந்த விதிகள் குறித்துத் தெரியாததால், அனைத்து அரசு டெண்டர்களிலும் பட்டியல் சாதி/பழங்குடியினருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 5% கட்டாய கொள்முதல் முன்னுரிமையை கடுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை தலித் தொழில்முனைவோரிடமிருந்து வந்த மனுக்கள் வலியுறுத்தியுள்ளன.
4. கல்வி உதவித்தொகை வருமான உச்சவரம்பு: மெட்ரிக் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகைகளுக்கான குடும்ப வருமான வரம்பை 2.5 லட்சத்திலிருந்து 8 லட்சமாக உயர்த்துமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று அந்த அமைப்புகள் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளன.
5. இவ்வாறு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக