இந்தியாவின் அதிசயத்தக்க வளர்ச்சிக்கு பிரதமர் மோடி மட்டுமே காரணம் நியூசிலாந்து பிரதமர். கிறிஸ்டோபர்லக்சன் மோடிக்கு புகழாரம்!!


மோடியின் சாதனைகளை விளக்கிய டாக்டர் ஆர் ஜி ஆனந்திற்கு பாராட்டு!

மாண்புமிகு பாரத பிரதமர். நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற2014ம் ஆண்டு முதல் நடப்பு 2025ம் ஆண்டு வரை 54 அரசு துறைகளில் அவர் செய்துள்ள அதிரடி சீர்திருத்தங்களையும் அற்புதமான சாதனைகளையும் விளக்கி 1306 பக்கங்கள் அடங்கிய  ஒரே நாடு-ஒரே புத்தகம் *ONE NATION-ONE BOOK* என்கிற மெகா புத்தகத்தை தயாரித்து இந்தியா மட்டுமின்றி 73 உலக நாடுகளில் முன்னாள் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர். 


டாக்டர். ஆர். ஜி. ஆனந்த் சமீபத்தில் வெளியிட்டார். இந்தப் புத்தகத்தைப் படித்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்திய நாடு அதிசயமான வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கும்  உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டுள்ளதற்கும் பிரதமர் மோடி மட்டுமே காரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளதுடன் மோடியின் சாதனைகளை வித்தியாசமான புத்தகமாக வெளியிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள டாக்டர் ஆர் ஜி ஆனந்தின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.இதற்கான கடிதத்தை நியூசிலாந்து பிரதமரின் தலைமை ஆலோசகர் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து மத்திய அரசின் பல்துறை அலுவலா்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் டாக்டர். ஆர். ஜி. ஆனந்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்