சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு!!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புரட்சியின் சட்ட மாமேதை அம்பேத்கார் 69 ஆவது ஆண்டு நினைவு நாள் நீ முன்னிட்டு பெரியகுளம் நகர் திமுக சார்பில் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்காரின் முழு உருவ வெண்கல சிலைக்கு தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அறிவுறுத்தலின்படி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சரவணகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகர் கழக அவை தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நகர கழகச் செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக