தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா 4-வது நாள் நிகழ்ச்சி!!

தேனி மாவட்டம், தேனி-நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும்  4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா 4 வது நிகழ்ச்சியாக தேனி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பாகவும்,மருத்துவ மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பாகவும் 

மண்ணும் மக்களும் என்ற தலைப்பில் நடைபெற்றது இதில் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன், நேர்முக உதவியாளர் விஜய குருசாமி, மற்றும் ,ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்