மதுரையில் ஓம்ஆலவாய் சகலகுரு லெட்சுமி சுரேந்தர் சுவாமிகள் 2ஆம் ஆண்டு குருபூஜை விழா!!
மதுரை மாவட்டம்,மதுரை துவரிமான் முத்தையா கோவில் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், ஓம்ஆலவாய் சகலகுரு லெட்சுமி சுரேந்தர் சுவாமிகளின் 2ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பரப்பிரம்ம பரந்தாமன் சுவாமிகள் நல்லாசியுடன் லெட்சுமி சுரேந்தர் சுவாமிகளின் குருபூஜை திருவாசக முற்றோதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிகளின் குருச்சேவகர் சுரேந்தர்சேது என்ற ஏ.ராமமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியின் குருஅருள் பெற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேன் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக