தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் சேலம் மாவட்ட கிளையின் சார்பில் நடைபெற்ற 2 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் !!
சேலம் மாவட்டம்,மாநிலத் தலைவர் டாக்டர்.மு .சிவ தமிழவன் தலைமையில் சேலம் மாநகரம் 4 ரோட்டில் உள்ள AMR ஹோட்டல் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் டாக்டர் G. செல்வக்குமரன், தேசிய ஊடகச் செயலாளர் டாக்டர் .B. வாணிஸ்ரீ சிறப்பு விருந்தினர்கள் திருப்பூர். முகமது கௌவுஸ், புரட்சித் தாய் சின்னம்மா முன்னேற்றக் கழக மாநில மகளிர் அணித் தலைவி. K. சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், மற்றும் வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றிய சேலம் மாவட்ட செயலாளர். M. கண்ணன் அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைமை உரை ஆற்றிய மாநிலத் தலைவரின் அடுத்த நிகழ்வாக சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட அமைப்பாளர்.வெ.தமிழழகன், மாநில பொருளாளர்.S. சுந்தரராஜன், மாவட்ட தலைமை சட்ட ஆலோசகர். So.கண்ணன், மற்றொரு சட்ட ஆலோசகர். M .சிவநேசன், எழுத்தாளர் & தினமலர். பாலு, மாவட்ட P.R.0. எஸ்.தமிழரசன், விசாரனை & வெளிச்சம் ஆசிரியர்.CA.கணேசன், ஜான்பாஸ், மற்றும் முன்னணி ஊடக செய்தியாளர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக