மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை!!
*கன்னியாகுமரி*
கடும் காற்றின் தாக்கத்தால் சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள குழப்புறையின் மேற்கூரை இரண்டாக உடைந்து சேதம் ஏற்பட்டது.
அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து அவசர சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
*திருச்சி* திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொது துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அமுல்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பெல் மெயின் கேட்டு முன்பு வாயிற் கூட்டம் நடந்தது.
*திண்டுக்கல்* உறைப்பனியால் ரம்மியமாக காட்சியளிக்கும் கொடைக்கானல்! இன்னும் மார்கழி மாதம் பிறக்காத போது இப்பொழுதே குளிர் வாட்டுகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் வீட்டிலேயே முடங்கினர். இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
*நீலகிரி*
குட்டி காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி!
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான உறைபனி விழுந்தது. குறிப்பாக நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் லேசான உறைப்பனி விழுந்தது. ஊட்டியில் மேல்கவ்வட்டி, தலைக்குந்தா, எச்பிஎப், பைக்காரா, ஷூட்டிங் மட்டம் மற்றும் கிளன் மார்க்கென் போன்ற பகுதிகளில் லேசான உறைப்பனி விழுந்தது.
*திருவள்ளூர்* அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் திடீரென்று வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டு வச்சலா என்பவர் படுகாயம் அடைந்தார். வச்சலாவை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் சுகுமார், மகன் லத்திஸ் காயமடைந்தனர்.
*செங்கல்பட்டு*
மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ தூரத்திற்கு தாது மணல் படர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நீரோட்டத்தோடு அடித்து வரப்பட்ட தாது மணல் கடற்கரை பகுதி படந்துள்ளது. சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுவதும் மணல் பரப்பு கறுப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. இது, காந்தகம் வைத்தால் இழுக்கும் திறன் கொண்டது.
*புதுக்கோட்டை* திருவப்பூர் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால் நீர் முழுவதும் சாலையில் பாய்ந்து வீணாகியது.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் தற்பொழுது குழாய் உடைப்பை ஜேசிபி மற்றும் தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்து வருகின்றனர் இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகம் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
*கோவை* பொள்ளாச்சியில் கந்துவட்டி
புகாரில் பெண்ணை மிரட்டியதாக
அதிமுக நகர இளைஞரணிச் செயலாளர் செந்தில்குமார் கைது.
*நெல்லை*
பாளையங்கோட்டை அருகே பள்ளியில் மது குடித்த விவகாரத்தில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்.
மாணவிகள் மது குடிக்கும் வீடியோ வெளியான நிலையில் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு; சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை.
*சென்னை* தூய்மைப்பணியாளர்கள் மீது FIR.
சென்னையில் நேற்று மெரினா, தலைமை செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 585 தூய்மைப்பணியாளர்கள் மீது வழக்கு பதிவு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.
கருத்துகள்
கருத்துரையிடுக