மதர் தெரசா வேளாண்மை கல்லூரியில் உலக மண் தினம்–2025 - சிறப்பு கலந்துரையாடல்!!


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர் தெரசா வேளாண்மை  கல்லூரியில் உலக மண் தினத்தை முன்னிட்டு “ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்” என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி 05.12.2025 அன்று 3.00 மணியளவில் நடைபெற்றது. தலைமை விருந்தினராக தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் பேராசிரியர் முனைவர் கோ. பூமிராஜ் கலந்து கொண்டு, மண்ணின் ஆரோக்கியம், நகர வளர்ச்சியில் மண்ணின் முக்கியத்துவம், மண் சேமிப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து பயனுள்ள உரையாற்றினார். மாணவர்கள் தங்களது பாடத்துடன் தொடர்புடைய நடைமுறை அறிவை விரிவுபடுத்திக் கொண்டனர். 

இந்நிகழ்வில், உதவி பேராசிரியர் முனைவர். கா. சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து முதல்வர் முனைவர் சுப. ராமநாதன் தொடக்க உரையாற்ற, பின்னர் பதிவாளர் வாழ்த்துரை வழங்கினார். தாளாளர் இரா.சி. உதயகுமார் தலைமையுரையில் மண் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விழாவின் முடிவில் உதவி பேராசிரியர் முனைவர் ஜானி சுபகார் ஐவின் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வு சூழல் பாதுகாப்பில் இளைய தலைமுறையின் பொறுப்பு உணர்வை மேம்படுத்துவதற்கு முக்கிய தளமாக இருந்தது மேலும் மாணவர்கள் மண் பாதுகாப்பு, அதன் ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மை குறித்த ஆழமான விழிப்புணர்வைப் பெற்றனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் PR.அசோக் 

கருத்துகள்