தேனியில் மத்திய அரசு கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!


100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் விதமாக மகாத்மா காந்தி அடிகளின் பெயர்களை நீக்கி  எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமான பெண்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வருவதோடு தற்பொழுது 100 நாள் வேலையை திட்டத்தில் கை வைத்து உள்ளது இந்த 100 நாள் வேலை திட்டத்தை நம்பி ஊராட்சியில் ஏழை எளிய பொதுமக்கள் வாழ்ந்து  வருகின்றனர்  அவர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக தற்பொழுது வரை படங்களை அனுப்பாமல் ஏமாற்றி வருகிறது இதை வன்மையாக கண்டிக்கிறது மதச்சார்பற்ற கூட்டணி 

தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பிஜேபி அரசை கண்டிக்கும் விதமாக போஸ்டர்கள் பாதகைகள் வைத்து கோஷங்கள் எழுப்பினர் 

அதனைத் தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கினார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுறை முன்னிலையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது

பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி மண்டல துணைச் செயலாளர் சுருளி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்

தொடர்ந்து காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதித்தமிழர் பேரவைமற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

தொடர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கையில் மோடிக்கு எதிரான வாசகங்களுடன் கையில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்