மோசூர் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க NOC கிடைத்த வெற்றி! சு.ரவி MLA வுக்கு பொதுமக்கள் பாராட்டு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி அம்பரீஷியபுரம் ஊராட்சி, மோசூர் ஊராட்சி, செய்யூர் ஊராட்சி நகரிக்குப்பம் ஊராட்சி, தக்கோலம் பேரூராட்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான சென்னை அரக்கோணம் ரயில் வழி தடத்தில் மோசூர் கிராமத்தில் உள்ள ரயில்வே கடவு என் 28(L C28) இங்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA அவர்கள் 

ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் NOC க்காக தீவிர போராட்டத்தின் பலனாக  வெற்றி அடைந்து ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யபட்டு விட்டது எனவே, விரைவில் பணிகள் துவக்கபட உள்ளது இந்த தகவலறிந்த அம்பரீஷியபுரம்,  மோசூர்,  செய்யூர், நகரிக்குப்பம் ஊராட்சி மற்றும் தக்கோலம் பேரூராட்சி மக்கள் கோடான கோடி நன்றிகளை சட்டமன்ற உறுப்பினர் சு.ரவிக்கு தெரிவித்து வருகின்றனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்