MRKP கதிரவன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாமக, த.வெ.க. நிர்வாகிகள்!!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழகம் சார்பில்,ஒன்றிய கழக செயலாளர் டாக்டர். எம்.மனோகர், அவர்களின் ஏற்பாட்டில் ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி.தஜிமூல் அவர்களின் தலைமையிலும், பரங்கிப்பேட்டை காங்கிரஸ் வட்டார தலைவர். வீரபாண்டியன் அவர்களின் தலைமையிலும்,
பாமக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்.திருமாறன், அவர்களின் தலைமையிலும் 300க்கும் மேற்பட்ட மாற்று கட்சி நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி, கடலூர் கிழக்கு மாவட்ட கழகப் பொருளாளர். MRKP கதிரவன் அவர்கள் முன்னிலையில் நமது திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
உடன் முன்னாள் பரங்கிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர். S.கருணாநிதி,சதா, இளவரசன், செல்வகுமாரி, சுப்பு, வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக