பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் பி. கே. மூக்கையா தேவர் உருவ சிலைக்கு மரியாதை!அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!
உசிலம்பட்டியில் தமிழ்நாடு கல்வி அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரத சாரண சாரணியர் பொன்விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் பி கே மூக்கையா தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உசிலம்பட்டி தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம் 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் கல்வி போல் தனித்திறமையும் முக்கியம் உலகமே உங்கள் கையில் இருந்தாலும் அதை தாண்டியும் ஒரு உலகம் இருக்கு படிப்பில் கவனம் செலுத்துவது போன்ற மாணவ, மாணவிகள் தனித்திறமைகளும் கவனம் செலுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும் என உசிலம்பட்டியில் அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
மேலும் இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்ச்செல்வன் எம் பி எம் எல் ஏக்கள் ஐயப்பன் பூமிநாதன் வெங்கடேசன் மற்றும் மாவட்ட செயலாளர் மு மணிமாறன் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கரஷ்குமார் மற்றும் மதுரை மாவட்டம் கல்வி அலுவலர். தயாளன் பாரத சாரண சாரணியர் இயக்குனர். கண்ணப்பன் ஆகியோர், இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக