இலுப்பூர் மதர்தெரசா இயற்கை மருத்துவ கல்லூரியில் சர்வதேச இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கருத்தரங்கு!!


புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள மதர் தெரசா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதன்முறையாக நடத்திய "NYCON-25" என்ற தலைப்பிலான சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கருத்தரங்கு, நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது. கருதரங்கிற்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் இரா.சின்னதம்பி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி கருதரங்கை துவக்கி வைத்தார்கள்.

இக்கருத்தரங்கில், குடந்தை அன்னைக்கல்லூரி, நாமக்கல் எக்ஸெல், திருச்சி இந்திரா கணேசன், துறையூர் இமயம், கோவை JSS, ஈரோடு கொங்கு,ஈரோடு நந்தா, சேலம் சிவராஜ், தென்காசி தங்கப்பழம் மற்றும் மதர் தெரசா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி என மொத்தம் 9 கல்லூரிகளிலிருந்து 700க்கும் மேற்பட்ட இயற்கை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. R.C. உதயகுமார், இன்றைய காலகட்டத்தில் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதைப் பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தனது ஆழமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மேலும் கல்வி நிறுவனங்களின் பதிவாளர் பேராசிரியர் மு.தினேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

அமெரிக்காவில் 'பிரேம் கமல் ஸ்பாஸ்' என்ற இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ நிலையத்தை நடத்தி வரும் டாக்டர் மிதேஷ், காணொளி மூலம் மாணவர்களுடன் உரையாற்றினார். அதில், "BNYS படிப்பின் மூலம் வெளிநாட்டில் தொழிலதிபர் ஆவது எப்படி?" என்ற தலைப்பில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், கருத்தரங்கில் பல்வேறு அனுபவம் மிக்க இயற்கை மருத்துவ நிபுணர்கள் உரையாற்றினர். 

அவர்கள் அமெரிக்கா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.டாக்டர் கங்காதர் வர்மா - நுரையீரல் பாதிப்புகளில் இயற்கை மருத்துவம். டாக்டர் விந்தியா வர்மா - பெண்களுக்கு இயற்கை மருத்துவம்.டாக்டர் கார்த்திக் ரெட்டி - தன்னுடல் தாக்கும் நோய்களில் இயற்கை மருத்துவம். டாக்டர். இன்பராஜ் - நரம்புச் செயலியலில் யோகாவின் பங்கு. டாக்டர். ரஹீம் சுல்தானா - இயற்கை மருத்துவம் ஏன் பொதுமக்களின் கடைசி தேர்வாக உள்ளது? என்ற தலைப்புகளில் ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்ற ஒன்பது இயற்கை மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு எங்கள் மதர்தெரசா கல்லூரி குழுமத்தின் தாளாளர் தலைமையில், அவர்களுடன் இணைந்து மதர்தெரசா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கிச் கௌரவித்தனர் . 

மேலும், இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் அதில்  தெரிவிக்கப்பட்ட கருத்துகழும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனப் பங்கேற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும்  தெரிவித்தனர். முன்னதாக கருதரங்கிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர். டாக்டர் கணேஷ் வரவேற்றார். கருதரங்கிற்கான ஏற்பாடுகளை டாக்டர் முத்து பாண்டி உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் செய்திருந்தனர். நிறைவில் மருத்துவர். கெளசல்யா நன்றி கூறினார்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 

கருத்துகள்