எனக்கு வாய்ப்பளித்தாள் வீட்டிற்கு ஒரு மோட்டார் சைக்கிள் சோளிங்கரில் ஐசக் பேச்சு!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் சார்பில் சோளிங்கர் நகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர். வி. எஸ். ஐசக் கலந்து கொண்டார் அவர் பேசிய போது மக்களுக்காக அகில இந்திய ஜனநாயக கட்சி செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் சார்பில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்க போகிறேன் ஆகவே உங்களுடைய ஆதரவு எனக்கு தர வேண்டும் வெற்றி பெற்றால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொண்டு வரவும் வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் கொடுக்கவும் திட்டமிட்டு உள்ளேன் மேலும் கல்வி உதவித் தொகைகள் கிடைக்கவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்மக்களை குழப்பிக் கொண்டிருக்கும் எஸ் ஐ ஆர் பணிகள் நிறுத்த வேண்டும்கிறிஸ்தவர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு தர வேண்டும் என பேசினார் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர். ஸ்ரீதர் தலைமை தாங்கினார் தேசிய மகளிர் அணி தலைவர். பிரேமா ஐசக் முன்னிலை வகித்தார். மணி வரவேற்றார். மேலும் மாநில நிர்வாகிகள் ஐடி தேவ ஆசிர்வாதம், தேவசித்தம், டேவிட் குட்டி, கிறிஸ்துராஜா, சத்யன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகரம் உள்ளிட்ட
நிர்வாகிகளுடன் நூற்றுகணக்கான கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட தலைவர். பாஸ்கர் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக