பூசாரிபட்டி முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேகம்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடி ஊராட்சி பூசாரிபட்டியில் முத்தாலம்மன் கோயில் வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜை அமைக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜை உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்ததை தொடர்ந்து மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக