சுயம்பு முத்துமாரி அம்மனுக்கு பிரம்மாண்ட விளக்கு பூஜை !!
தேனி மாவட்டம்,கொடைரோடு அருகே அம்மைய நாயக்கனூரில் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு முத்துமாரி அம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பிரம்மாண்ட விளக்கு பூஜை நடைபெற்றது.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுயம்பு முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக