இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா :அமைச்சர் பங்கேற்பு!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா ரெண்டிவயலில் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு புதுகை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா தலைமை வகித்தார். திருமயம் ஒன்றிய திமுக செயலாளர்.  கணேசன்,முன்னாள் ஒன்றிய செயலாளர். ஆர்.எம்..கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விராச்சிலை வார்டு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவில்  12 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை இயற்கை வளங்கள் துறை அமைச்சர். ரகுபதி வழங்கினார். விழாவில் வருவாய், ஊரக வளர்ச்சி அலுவலர்கள்.திமுக  நிர்வாகிகள் ,கிராம மக்கள் கலந்து கொண்டனர். விராச்சிலை சரக வருவாய் ஆய்வாளர் நந்தினி நன்றி கூறினார். முன்னதாக அமைச்சர். ரகுபதி  அரிமளம் ஒன்றியம்  கல்லூரில் 44 குடும்பங்களுக்கு அரசின் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்