சோதனை ஓட்டத்திற்கு எடுத்துச் சென்ற கார் வழியில் தீப்பற்றி சேதம் !!

ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டி பாளையத்தின் அருகே பழுது நீக்கம் செய்யப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு எடுத்துச் சென்ற கார் வழியில் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது குள்ள பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் கார் பழுது நீக்கம் செய்து சோதனை ஓட்டத்தின் எடுத்துச் சென்றபோது காரின் முன் பகுதியில் புகை வந்துள்ளது. இதனை கண்ட கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் இதை அடுத்து கார் முழுவதும் தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்