85 வயதான மூதாட்டியிடம் பூர்வீக வீட்டையும் சொத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன்!

 


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகில் தி. பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த எண்பத்தி ஐந்து வயதான சுப்புலட்சுமி என்ற மூதாட்டியிடம் தனது பூர்வீக வீட்டையும் சொத்தையும் தனது மகன் எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு விரட்டி விட்டதாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் சுப்புலட்சுமி மனு அளித்தார். 

தனக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ள நிலையில் கடைசி காலத்தில் குடியிருக்க கூட வீடு இல்லை என்று தனது வருத்தத்தை முறையிட்டார் தோட்டம் ,வீடு, அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர் என்றும் தனக்கு இருக்க வீடும் ஜீவனாம்சமும் வேண்டியும் கோரிக்கை வைத்துள்ளார்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்