கடலூர்: திருமணமான 2 மாதத்தில் 8 மாத கர்ப்பம்; கணவர் அதிர்ச்சி!!
கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி அருகே, திருமணமான இரண்டு மாதங்களிலேயே 18 வயது புதுப்பெண் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. புதுப்பெண்ணின் கர்ப்பத்துக்கு அவரது தாய்மாமன் லிங்கமுத்து (32) தான் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்காள் வீட்டில் தங்கியிருந்த லிங்கமுத்து, தனது அக்காள் மகளான புதுப்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டு கர்ப்பமாக்கியுள்ளார். லிங்கமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக