வேலூரில் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டம்!!

வேலூர் மாவட்டம், ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் மீண்டும் நடைமுறைபடுத்த கோருதல், 23.08.2010க்கு முன்னதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட கோருதல்,  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோருதல், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெற்று பணியாற்றிவரும்  ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்கி பணிநிரந்தரம் செய்ய கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் 18.11.2025ல் பங்கேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன், ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் முகமது உசேன் ஆர்ப்பட்டத்தினை தொடக்கி வைத்து பேசினார்.

மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்  தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், உருதுவழி ஆசிரியர் சங்க முகமது ஷாநவாஸ் வேளாண் ஆசிரியர் சங்க அக்ரி.இராமன், கணினி ஆசிரியர் சங்க ஜி.கோபி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க துரை.கருணாநிதி,  தலைமையாசிரியர் எம்.சினேகலதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், மாவட்ட உயர்மட்டக்குழு நிர்வாகிகள் பட்டதாரி ஆசிரியர் கழக ஆசிரியர் சங்க எம்.எஸ்.செல்வகுமார், தமிழாசிரியர் சங்க வாரா, முதுகலை ஆசிரியர் கழக ஆர்.ஜெயக்குமார், ஆசிரியர் முன்னேற்ற சங்க ஜி.டி.பாபு,  இடைநிலை ஆசிரியர் சங்க க.குணசேகரன், பெ.இளங்கோ, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற அல்போன்ஸ்கிரி, சோக்காராமன், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர் சங்க கவியரசன், சங்கர், தனசேகர், மலர்விழி, சபிதா, ஜெயபிரகாஷ், திருக்குமரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க ரமேஷ், நில அளவை ஒன்றிப்பு கங்காதரன், ஊரக வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ்குமார், மருந்தாளுனர் சங்கம் ஜீவநாதன், கல்வித்துறை தேவசேனன்,  வனத்துறை கருணாநிதி, பட்டு வளர்ச்சி துறை பிரபாகரன், வருவாய் கிராம உதவியாளர் சங்க துரைராஜ், மகளிர் துணைக்குழு ப.ஜோதி, சத்துணவு ஊழியர் சங்க புவனேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர்

நிறைவாக முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் நிறைவுரையாற்றினார்.

வேலூர் மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் அனைத்து வகை ஆசிரியர்கள் என சுமார் 3000பேர் பங்கேற்றனர் மேலும் ஆர்ப்பாட்டத்தில் 300 பெண்கள் உள்பட 700பேர் பங்கேற்றனர் ஆர்ப்பாட்டம் 10.30 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெற்றது.  இந்த போராட்டத்தின் காரணமாக பல்வேறு பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி முழுமையாக பாதிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிசோடி காணப்பட்டதாக மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் கூறினார்.

கோரிக்கைகள்

1.பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2.ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினைக் காரணம் காட்டி 23.08.2010க்கு முன்னதாகப் பணியேற்ற ஆசிரிர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து டெட் தேர்விலிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் 

3.காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம்.

4.இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

5.முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள்,  ஆகியோடருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.  கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும்.  மேலும் மேல்நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.

6.சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.  மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

7.அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.

8.21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்

9.2003 முதல் 2005 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்டுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

10.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்