தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த 14ஆவது ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை !!


தேனி மாவட்டம்,தேனி மாவட்டத்திற்கு பேருந்து மூலம் வருகை தந்த உலகக்கோப்பையிணை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ப. ரஞ்சித் சிங் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச் செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும்தேனி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பி.சினேஹ பிரியா மற்றும் மாவட்ட அலுவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இணைந்து துவக்கி வைத்தனர். 14 வது ஆண்கள் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டி சென்னை மற்றும் மதுரையில் வருகின்ற 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து இந்த ஹாக்கி போட்டியின் உலக கோப்பையினை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்று பொதுமக்கள் பார்வைக்காக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று மதுரையில் முக்கிய விதிகளில் சுற்றி வந்த உலகக்கோப்பை இன்று தேனியில்..

தேனி மாவட்ட சிறப்பு செய்திகளை தனலட்சுமி

கருத்துகள்