புதுக்கோட்டையில் ரூ.13 லட்சம் செலவில் நியாய விலைக்கடை திறந்து வைத்த டாக்டர். வை. முத்துராஜா MLA!!
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிமாநகராட்சிக்குட்பட்ட 9A நத்தம் பண்ணை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய். 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு 19 / 11 / 2025 இன்று திறந்து வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா MLA அவர்கள் திறந்துவைத்தார்!
இந்நிகழ்வின் மாநகர மேயர். திலகவதி செந்தில் , மாநகர துணை மேயர். லியாக்கத் அலி மற்றும் ஆரோக்கியசாமி, எம். டி. ஆர். ராமசாமி, அழகு ,பாலன் நகர் பாஸ்கர் ,ஏ கே சக்திவேல், ரெங்கசாமி, பரூக், நடராஜன், நந்தகுமார், ராஜசேகர் உள்ளிட்ட மாநகர ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் உள்ளாட்சி அமைப்பினர் திமுக கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக