நத்தம் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் 1008 சங்குகளால் சிவபெருமானை லிங்க வடிவத்தில்  வில்வ இலை மற்றும் மலர்களால்  அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர்  செண்பகவல்லிஅம்பிகா சமேத கைலாசநாதருக்கு பால், பழம், பன்னீர் விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள்  கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்