தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு! பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை வாலாஜாவில் நடிகை கௌதமி பேச்சு!!



ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்தில் அதிமுகவின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாலாஜா நகர கழகச் செயலாளர் டபிள்யு.ஜி.மோகன் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகரக் செயலாளர் கே.பி சந்தோஷம், ஆற்காடு நகர செயலாளர் ஜிம். சங்கர், விஷாரம் நகர செயலாளர். இப்ராஹிம் கலிலுல் லா, ஒன்றிய கழகச் செயலாளர்கள். சொரையூர். குமார், பூண்டி பிரகாஷ், ராதாகிருஷ்ணன், பூங்காவனம்  உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

வாலாஜா தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். சத்திய வேலகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர். திலீப் குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.இதில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். எம்.சுகுமார் சிறப்பு அழைப்பாளர்களை கௌரவித்து வாழ்த்துரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான. முக்கூர். எம்.சுப்பிரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக கழக கொள்கை பரப்புச் துணை செயலாளரும், திரைப்பட நடிகையுமான கௌதமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது; 

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை காற்று, நீர், உணவு இருப்பிடம் ஆகியவை அத்தியாவசிய தேவைகளாக இருக்கின்றன. இந்த அத்தியாவசிய தேவைகளை ஆளுகின்ற அரசு மக்களுக்கு கொடுப்பது கடமையாகும்.

ஆனால் இப்பொழுது ஆளுகின்ற திமுக அரசு மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை மாறாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லை,காற்று மாசு படுகிறது,சுத்தமான குடிநீர் இல்லை, மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு இல்லை,விலைவாசி ஏற்றம், இப்படி மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. 

மாவட்ட செயலாளர். சுகுமார் சொன்னது போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசிசி கம்பெனியில் குரோமிய கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் தமிழகத்திலேயே புற்றுநோய் பாதிப்பில் ராணிப்பேட்டை மாவட்டம் தான் முதல் மாவட்டமாக இருக்கின்றது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை சட்ட ஒழுங்கு சீர் கெட்டு கிடக்கிறது.

சிறு பெண் பிள்ளைகள் கூட தனியாக சாலையில் நடந்து போக முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் சிந்திக்க வேண்டும். திமுக ஆட்சியை அகற்றி வருகின்ற 2026 இல் எடப்பாடியாரின் நல்லாட்சியை கொண்டு வந்து தமிழகம் சிறந்து விளங்க  இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்