பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா_2025 !!


ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட 4வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 னை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் தொடங்கி வைத்தார். 


உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால் இ.கா.ப. ஆற்காடு சட்டமன்றஉறுப்பினர்.ஜெ.எல்.ஈஸ்வரப்பன் MLA, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்.ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்.சுஜாதா வினோத். ஒன்றிய குழு தலைவர்கள். பெ.வடிவேலு,நிர்மலா சவுந்தர் துணைத் தலைவர்.ரமேஷ்கர்ணாமற்றும்நகரசெயலாளர்.பி.பூங்காவனம்மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்