பண்ருட்டி: வால்காரர் தெருவில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் 2024_ 2025 கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி! நேரில் சென்று ஆய்வு செய்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!


கடலூர்மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு  வால்காரர்  தெருவில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம் 2024 2025 கீழ்  சிமெண்ட் சாலை அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. இன்று 11.10.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றிவிட்டு சிமெண்ட் சாலை அமைக்க உத்தரவிட்டார் மேலும் வார்டில் உள்ள மக்கள் குறைகளை கேட்டறிந்தார். 


உடன் உதவி பொறியாளர். கார்த்திகேயன் நகர மன்ற உறுப்பினர்கள். சரண்யா ரகுபதி. சண்முகவள்ளி பழனி. கிருஷ்ணராஜ். வட்ட பிரதிநிதி. சித்திரவேல் மாணவர் அணி துணை அமைப்பாளர். பிரபு  ஒர்க் இன்ஸ்பெக்டர். வெங்கடேசன் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்