பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம் எதிரே சுரங்கப் பாதை வேண்டும்! சு.ரவி MLA கோரிக்கை!!

 ராணிப்பேட்டை மாவட்டம்,திருத்தணி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் எதிரே சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டும் என எதிர்க்கட்சி துணை கொரடா சு.ரவி எம். எல். ஏ திருவள்ளூர் மாவட்டம். தேசிய நெடுஞ்சாலை அலுவலக திட்ட இயக்குநருக்கு ,

கோரிக்கை விடுத்தார். அதில் அவர் கேட்டு கொண்டதாவது எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரக்கோணம் ஒன்றியம், பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 410 மீட்டர் தாண்டி மேம்பாலத்துடன் சுரங்கப் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பெருங்களத்தூர் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் எல்லாம் திருவள்ளூர் மற்றும் திருத்தணி செல்ல பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தை தான்  நீண்ட காலமாக  பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில். தற்போது பேருந்து நிறுத்தத்தில் இருந்து 410மீட்டர் தாண்டி சுரங்கப்பாதை அமைக்கப்படுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகவே பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் பெரிதும் பாதிப்படைவார்கள்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி தற்போது வந்து இருக்கும் மேம்பால பணியை நீட்டித்தும் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் எதிரே சுரங்கப்பாதை அமைக்க ஆவண செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறுகோரிக்கைவிடுத்துள்ளார்இதன் நகலை இராணிப்பேட்டை .மாவட்ட ஆட்சித் தலைவருக்கும்அனுப்பி வைத்துள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்