திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்கை கூட்டம்! அமைச்சர். கே. என். நேரு பங்கேற்பு!!

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர். கே. என். நேரு அவர்கள் கலந்து கொண்டு அவரது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 

கரூரில் நடைபெற இருக்கும் திமுக கழக முப்பெரும் விழாவில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தின் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது,

சமூக நீதிக் காவலர். தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படத்தை இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்த நம் கழகத் தலைவர். மாண்புமிகு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின்  அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பது,

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நிய முதலீடுகளை ஈர்த்ததுடன் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளையும் -  தொழில் வளர்ச்சியையும் உருவாக்கி நமது மாநிலத்தின் நலனை காத்து வரும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

இக்கூட்டத்தில், மத்திய மாவட்ட செயலாளர். வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர். காடுவெட்டி தியாகராஜன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்.அருண் நேரு, மாநகர செயலாளர் - மேயர்.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள். சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், அவைத் தலைவர்கள்.பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோருடன் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் திரளாக பங்கேற்றனர்.

கருத்துகள்