புதுச்சேரி என். சி. சி குரூப் கமாண்டர் கர்னல் ஆர்.ஆர். மேனன் ஆய்வு!!
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஆறாவது தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 2026 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் மாணவர்களை பங்கேற்க செய்யும் பயிற்சி,
துப்பாக்கி சூடுதல் பயிற்சி,ட்ரில் பயிற்சி,கலை நிகழ்ச்சிகள், சிறந்த என்சிசி மாணவர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை புதுச்சேரி என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் ஆர்.ஆர். மேனன் தலைமையில் நடத்தப்பட்டன. இம்முகம் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெற உள்ளது. இம்முகாமை ஆறாவது தமிழ்நாடு கமான்டிங் அதிகாரி கர்னல் எஸ்.சக்ரபர்த்திதொடங்கி வைத்தார்.
லெப்டினட் கர்னல். நாராயண், லெப்டினட் கர்னல். ஆர்.கே. காத்ரி மற்றும் லெப்டினட் கர்னல். ரஞ்சித் ராத்தி ஆகியோர் முகாமில் பங்கேற்றனர்.செப்டம்பர் 6 காவலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை நகர் சரக காவல் ஆய்வாளர். அம்பேத்கர் தேசிய மாணவர் படை மாணவர்களிடம் விழிப்புணர்வு சொற்பொழிவு ஆற்றினார்.செப்டம்பர் 9 என்சிசி அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் புதுச்சேரி என் சி சி குரூப் கமாண்டர் கர்னல் ஆர்.ஆர். மேனன்
தலைமையில்நடைபெற்றது.இக்கலந்துரையாடலில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் சார்ந்த 60க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.மேலும் என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் ஆர்.ஆர்.மேனன் மற்றும் ராணுவ அதிகாரிகள் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் டாக்டர். எஸ். அறிவுடைநம்பி அவர்களை சந்தித்து என்சிசி செயல்பாடுகளுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒத்துழைப்பு தருவதற்கு நன்றி தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக