புதுச்சேரியில் நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் தினக்குயில் நாளிதழை பாராட்டி கௌரவிக்கப்பட்டது!


புதுச்சேரி அரசியல்,கலாச்சார மாத இதழ் புதுவை தேசம், தமிழ் மண் சமூக நல அறக்கட்டளை, தடயம் மாத இதழ், திருவாரூர் நியூ பாரத் பதின்ம மேல்நிலைப் பள்ளி இணைந்து வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா மற்றும் புதுவை தேசம் 15வது ஆண்டு விழா புதுச்சேரி கீர்த்தி மஹாலில் நடைபெற்றது.


புதுவைதேசம் மாத இதழ், ஆசிரியர்- வெளியீட்டாளர், தமிழ்நாடு பிரஸ்ஃமீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநிலத்தலைவர், மற்றும் புதுதில்லி அகில இந்திய செய்தித்தாள் பணியாளர்கள் கூட்டமைப்பு தேசிய அமைப்புச்செயலாளர் டாக்டர்.மு.சிவதமிழவன் தலைமையில்  த.பி.மீ.ரி.யூனியன் மாநில நிர்வாகக்குழு தலைமை இயக்குனர் லயன்.எம். பெருமாள், புதுவைதேசம் மாத இதழ் நிர்வாக ஆசிரியர் எஸ்.மாடபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்தவிழாவில் புதுவை சபாநாயகர், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், திரைப்பட கலைஞர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக துறையினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தினக்குயில் நாளிதழை பாராட்டி தினக்குயில் ஆசிரியர் எஸ்பி. லோகநாதனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!