புதிய கட்டடம் நகர மன்ற தலைவர் இடத்தேர்வு!!


கடலூர்மாவட்டம்,தமிழ்நாடு அரசு 2025 26 ஆம் நிதி ஆண்டில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர். தி. வேல்முருகன் எம். எல். ஏ அவர்களின் கோரிக்கையை ஏற்று, பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம்  கடலூர் மாவட்ட ஆட்சியர்.சிபி. ஆதித்ய செந்தில்குமார் IAS அவர்கள் பண்ருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நேரடியாக ஆய்வு செய்து பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை கேட்டறிந்தார் மேலும் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் அமைக்க சார்ந்த துறை அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். கட்டடங்கள் அமைய உள்ள பகுதியை பண்ருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி வளர்ச்சி குழு தலைவரும் பண்ருட்டி நகர மன்ற தலைவருமான க.ராஜேந்திரன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.இவ்வாய்வின் போது பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர். சு.திருமாவளவன் அவர்களும்,

பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர். ராஜா ஆ ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர். ஏ. வீ.லோகநாதன் ,நகராட்சி அரசு ஒப்பந்ததாரர்.ராஜா, பள்ளி வளர்ச்சி குழு துணைத் தலைவர். E.பழனி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர். நிர்மலா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர்.P. சண்முகவள்ளி பழனி  ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்