நெய்வேலி: இந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடம்!!
கடலூர் மாவட்டம்,நேற்று (01.09.2025) நெய்வேலி இந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வில் தலைமை தாங்கியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் கல்வி முன்னேற்றத் திட்டங்கள், மாணவர்களின் எதிர்காலத்திற்கு உறுதியான அடித்தளமாக உள்ளன.இந்த புதிய கட்டிடம், நமது மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் சூழலை வழங்குவதோடு, நெய்வேலி பகுதியில் கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ அவர்கள் தெரிவித்தார்.
இந்த விழாவில் SDO சபிதா அருள்ராஜ், தலைமை ஆசிரியர். ரமாமணி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர். குணசேகரன், அவைத்தலைவர். வீர ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர். ஆனந்த ஜோதி, மாவட்ட பிரதிநிதி ராம வெங்கடேசன், இளங்கோ, இளைஞர் அணி துணை அமைப்பாளர். கோபு, வினோத் குமார், வர்த்தகரணி தலைவர் சேகர், சடையப்பன், துணைச் செயலாளர். ஏழுமலை, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர். ஆனந்தன், சுந்தரமூர்த்தி, காசிநாதன், கிருஷ்ணமூர்த்தி, அக்ஷயா, வாஜித், சங்கர், சுரேஷ், ராமர், கிளை செயலாளர் பூபதி, சுப்ரமணியன், கணேசன், கார்த்திக், ஊராட்சி செயலர் எழில் உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக