ஜி சி சி ஐ செனாட் கூட்டத்தில் ஆந்திரா, தமிழக பிஷப்கள் தேர்வு!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், மஞ்சம்பாடி கிராமத்தில் குளோபல் சர்ச் ஆப் கிறிஸ்ட் செனாட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திர மாநிலம் தமிழ்நாடு பகுதிகளுக்கான பிஷப்கள் தேர்வு நடைபெற்றது. குளோபல் சர்ச் ஆப் கிரிஸ்ட் பிரதமர் பேராயர் டாக்டர். ஐசக் ஐயா தலைமையில் நடந்த கூட்டத்திற்கு
தென் மாநிலங்களின் செயலாளர். பேராயர் டேவிட் குட்டி, மாநில முதன்மை செயலாளர். செட்ரிக் பெநோ, மாநில செயலாளர். கிறிஸ்து ராஜா, மாநில பொருளாளர். பர்ண பாஸ் சைமன் உட்பட தமிழ் மாநில பேராயர்கள், ஆந்திர மாநில பேராயர்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநில பேராயர் முன்னிலை வகித்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பேராயர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலத்திற்கான பிஷப்புகளை தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்கள் பதவி காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டன கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவைகள் வருமாறு இந்தியாவில் தற்போது 20% இருந்து 40% பேர் கிறிஸ்துவ மக்கள் பெருக்கியுள்ளனர். இவர்கள் கல்வி வேலை வாய்ப்பில் பிராமணர்களுக்கு 10 விழுக்காடு ஒதுக்கப்பட்டது. போல கிறிஸ்தவர்களுக்கும் மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்றத்திலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதமாற்ற தடை சட்டம் உருவாக்கப்பட்டு வருவதால் அந்த தடை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவரவர் விரும்பிய மதத்தை தெரிந்து கொள்ளவும் வாழவும் வழி வகுக்கிறது அந்த அடிப்படையில் கிறிஸ்தவர்கள் மீது அவதூறான வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்தப்பட வேண்டும். கிறிஸ்தவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவதால் அனைத்து கிறிஸ்தவர்களும் பேராயர்களும் போதகர்களும் அரசியல் ஈடுபடும் போது அதற்கு இடையூறாக மற்ற அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாதபடி தடுத்து நிறுத்த வேண்டும். கிறிஸ்துவ சிறுபான்மை மக்கள் கல்வி நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரியில் சட்டக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழக உருவாக்குவதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றினர். கல்லூரி மேலாளர். ஜெய்சன் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக