நெமிலி பேரூராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் - பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர்& பேரூராட்சி மன்ற தலைவர்!!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சியில் உள்ள, கலா பேரடைஸ் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்”திட்டமுகாம்நடைபெற்றது.முகாமிற்கு நெமிலி பேரூராட்சியின் செயல் அலுவலர். எழிலரசி தலைமை தாங்கினார், நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன் வரவேற்றார்.

இந்த முகாமில், சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் நெமிலி பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர். ஞானசுந்தரம், நெமிலி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர். சந்திரசேகர், நெமிலி பேரூர் செயலாளர். ஜனார்த்தனன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், கவுன்சிலர்கள். ஏழுமலை, தண்டபாணி, சேகர், மங்கையர்க்கரசி, முகம்மது அப்துல் ரகுமான் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!