கரூரில் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று, கரூர் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிக்கு, குப்பைகள் சேகரிக்கும் மின்கல வாகனங்களை வழங்கி, பின்னர் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ. தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக