ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!!
இராணி பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர எல்லையில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது இங்கு நேற்று போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் அரசு உத்தரவிற்கிணங்க நடைபெற்றது. இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் சென்னையில் நடைபெற்ற நேரடி காட்சி கல்லூரியில் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மனித சங்கிலி உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர். ஜெயகாந்தன் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறை உதவி ஆய்வாளர். சரவணன் சிறப்பு உதவி ஆய்வாளர். கிளாரா கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வாசித்தனர். நிகழ்ச்சியில் என். எஸ். எஸ். மாஸ்டர். ஜெயகுமார்,மதுவிலக்கு அமலாக்க காவல் துறை ரவிச்சந்திரன், ரமேஷ் கண்ணா கல்லூரி பேராசிரியர். சுந்தரலிங்கம் மற்றும் 300ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய பேராசிரியர். வீரமணி இறுதியில் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக