தேமுதிக எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரேமலதா கோரிக்கை!!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.
சோளிங்கர் பெருமாள் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்த பின் பெருமாள் கோவிலில் இருந்து காந்தி சாலை அண்ணா சாலை வாலாஜா சாலை சோளிங்கர் பேருந்து நிலையம் வழியாக கருமாரியம்மன் கோவில் அருகே சென்று வேனில் இருந்தபடியே தன் கட்சித்தொண்டர்களுக்கு இந்தப் பயணம் இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்தையும் சுற்று பயணமாக வந்து கொண்டிருக்கிறேன். இன்று சோளிங்கர் நகரில் உங்களை சந்தித்து உங்கள் ஆசி பெற்றதற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த சுற்றுப்பயணம் கட்சியில் வளர்ச்சியும் பலப்படுத்தவோம் இந்த சுற்றுப்பயணம் எனவும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கூட்டணி குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை!
நாங்கள் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி விட்டோம் அடுத்து நாங்கள் எந்த கூட்டணிக்கு சென்றாலும் கட்டாயமாக தேமுதிக தொண்டர்கள் அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சோளிங்கர் தொகுதி தேமுதிக வெற்றி பெற செய்த ஒரு மகத்தான தொகுதி மீண்டும் தேமுதிக சோளிங்கர் தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் தேமுதிக வெற்றி பெற்றால் கஞ்சா கூலிப்படை ஆணவ படுகொலை இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் எனவும் சிறந்த தொகுதியாக சோளிங்கர் தகுதியை கொண்டு வருவோம் எனவும் பேசினார்
இதில் ஆயிரம் கணக்கான தேமுதிக மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.






கருத்துகள்
கருத்துரையிடுக