மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து மற்றும் இதர விளையாட்டு துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர். சு.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர். பி. ஹேமலதா,பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர். ஏ. வீ.லோகநாதன் பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர். E.பழனி, முதுகலை ஆசிரியர்கள். குமார், லட்சுமிகாந்தன்.பாரதி ஆசிரியர் செயலர். ரத்தின பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பண்ருட்டி எஸ்.வீ.ஜுவல்லரி உரிமையாளரும்,சமூக ஆர்வலருமான  எஸ் .வீ.அருள் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டி-ஷர்ட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கி வாழ்த்துரை ஆற்றினார்.பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர். முனைவர். ராஜா.ஆநன்றிகூறினார்.முன்னதாகஉடற்கல்வி இயக்குனர். சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர். செல்வகுமார் ஆகியோர் நோக்கியாற்றினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்