பண்ருட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! நகர் மன்ற தலைவர். க.ராஜேந்திரன் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மக்களின் குறைகள் தீர்க்கும் முத்தான திட்டம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்களின் ஆலோசனைப்படி பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 28 29 ஆகிய பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று 5.8.2025 SPDR. திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமினை பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு முகாமினை தூக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகங்கள் வழங்கினார்.
உடன் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா நகராட்சி பொறியாளர். கண்ணன் உதவி பொறியாளர். கார்த்திகேயன் மேலாளர். காதர் கான் சுகாதார அலுவலர். கிருஷ்ணராஜ் நகர அவைத் தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர துணை செயலாளர். கௌரி. அன்பழகன் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். பாரி நகர மன்ற உறுப்பினர்கள். கிருஷ்ணராஜ், கலைவாணி, மதியழகன் வார்டு செயலாளர். செல்வ கணபதி நகர இளைஞர் அணி அமைப்பாளர். சம்பத் மற்றும் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக