அரக்கோணம் பள்ளி மாணவர்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கல்லாறு அருகே எஸ். ஆர். இ. டி எனும்  பெண்கள் கல்வி முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்கிழமை மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி. வகுப்பு

நடைபெற்றது. இதற்காக அரக்கோணம் சி.எஸ்.ஐ தூய அந்திரேயர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர். பயிற்சியில்  இயற்கை விவசாய முறையும் கூட்டுப்பண்ணையில் இருந்து பயனடையும் லாபங்கள குறித்தும் எடுத்துக்கபட்டது. .இயற்கை விவசாயம், மண்புழு உரம், வேளாண் சூழல், ஆகியவற்றைக் குறித்து இயற்கை விவசாயி ஆனநீது தகவல் பகிர்ந்தார் மேலும் வீட்டிற்கு தேவையான முருங்கை, வாழை, பப்பாளி போன்ற சிறியரக தோட்டங்கள் அமைக்கபட வேண்டும் எனவும் எடுத்துரைக்கபட்டது மேலும்

மண்புழு உரம் தயாரிக்க , தொட்டிகள் எடுத்து கொள்ள வேண்டும் அதில் முதலில்  தேங்காய் மட்டைகளை அடுக்க வேண்டும்.பிறகு காய்ந்த விறகுகளையும், சுள்ளிகளையும் போட வேண்டும். பிறகு மாட்டு சாணம் தண்ணீரில் நன்றாக கரைத்து ஊற்ற வேண்டும் தொடர்ந்து அதில்.மண்புழுகளை போட வேண்டும். காய்ந்த தென்னை ஓலைகளை கொண்டு மூடிவைக்கவேண்டும்.வேஸ்ட்காய்கறிகளையும்  செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம் .

இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட வெடி பொருட்கள்இருந்த இடத்தில் செடிகள் வீரியமாக வளர்ந்து இருந்ததைக் கண்டு, இந்த பொருட்களும் விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தலாம் என்றும் எடுத்துக்க பட்டது.இறுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர். சாந்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்