மாங்குரோவ் காடுகளை படகில் சென்று பார்வையிட்டு கண்டுகளித்த சிதம்பரம் காவலர் குடியிருப்பு வாசிகள்!!


கடலூர் மாவட்டம்,அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர். அம்பேத்கர் அவர்களின் முயற்சியால், சிதம்பரம் காவலர் குடியிருப்பில் வசிக்கின்ற காவலர்களின்  குடும்பத்தினர் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளை படகில் சென்று பார்வையிட்டு கண்டு களிக்க ஏற்பாடு மேற்கொள்ள செய்ததின்பேரில் இன்று 3.8.25 தேதி சிதம்பரம் காவலர் குடியிருப்பு வசிக்கும் காவலர்களின் குடும்பத்தார்கள் 80 நபர்கள் வேன் மூலம் பிச்சாவரம் அழைத்து சென்று  படகுமூலம் சென்று பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாட்டினை உதவி ஆய்வாளர் . மகேஷ் காவலர்கள். விவேக், கஜேந்திரன், சதீஷ்குமார் கிருஷ்ணகுமார், ஆகியோருடன் வனச்சரகர். இக்பால் ஆகியோர் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் காவல் குடும்பத்தார்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்கள் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்