பள்ளிகொண்டாவில் இந்திய குடியரசு கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டம்!!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா பேருந்து நிலையம் அருகில்,இந்திய குடியரசு கட்சியின் சார்பில், நெல்லை கவீன் ஆணவப் படுகொலையை கண்டித்தும், ஆவணப் படுகொலைக்கு தனி சட்டம் இயற்றக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய குடியரசு கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர். சுரேஷ்குமார் தலைமையிலும், டாக்டர். அம்பேத்கர் விழிப்புணர்வு சங்க செயலாளர். ஜெயபால் வரவேற்புரையாற்றுகையில், குடியாத்தம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், எம்.மது, சக்திவேல், மணிகண்டன், தயாளன் ஆகியோர் முன்னிலையில் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் வேலூர் மண்டல செயலாளர். இராசி.தலித்குமார் ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று துவக்கி வைத்து கண்டனப் பேருரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் சபாநாயகருமான டாக்டர். செ.கு. தமிழரசன் கலந்து கொண்டு கண்டன பேருரையாற்றினார்.
மேலும், இந்திய குடியரசு கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கே.மாங்கா பிள்ளை, பி.எஸ்.கௌரிசங்கர், பி .தட்ராஜ், என்.ரமேஷ்குமார், எஸ்.மலராஜன், பெளத்த ஆராய்ச்சி மையம் மனோகரன் மற்றும் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட நகர ஒன்றியம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்
கருத்துரையிடுக